1.சாந்தியாசனம்
சாந்தியாசனம்
ஓய்வாசனம் சவாசனம் (முழுமையான தளர்வுப் பயிற்சி) தூங்கிக் கண்டார் சிவலோகம் தம்முள்ளே தூங்கிக் கண்டார் சிவபோகம் தம்முள்ளே தூங்கிக் கண்டார் சிவயோகம் தம்முள்ளே தூங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே -திருமூலர் சவ என்றால் பிறம். உச்சந்தலையில் உடல் ஒரு சவம் போன்று தோன்றுகிறது. இந்த ஆசனம் செய்வோர் உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் எல்லாத் தூண்டுதல்களுக்கும் ஆட்படாமல் எந்த எதிர்ச் செயலுமின்றி பிணம் போல் ஆக வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மனம் : கால் கட்டை விரல்களில் துவங்கி மற்றும் உடல் முழுவதும் பரவி இறுதியில் மூளை (தலை) வரை மூச்சின் கவனம் : ஆழ்ந்த மூச்சு உடல் ரீதியான பலன்கள் : ஆசனங்கள் முடித்த பின் கண்டிப்பாக இந்த ஆசனம் செய்ய வேண்டும். 5 முதல் 20 நிமிடம் வரை செய்யலாம். அற்புதமான பலன்களைக் கொடுக்கக்கூடியது. மூளைக்கு நல்ல ஓய்வு. உடல் முழுவதையும் உறுதிப்படுத்தி ஊக்கமளிக்கிறது. எல்லாத் தசைகளும் மூட்டுகளும் தளர்த்தப்படுகின்றன. தினமும் இருவேளை செய்யலாம். பிரணாயாமம் செய்வதற்கு உடல் ஏற்றதாகிறது. 30 நிமிடப் பயிற்சி 3 மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்கு சமமாகிறது. குணமாகும் நோய்கள் : அதிக இரத்த அழுத்தம், மனஇறுக்கத்தால் உண்டாகும் தலைவலி ஆகியவற்றால் ஏற்படும் மனநோய் பிரச்சனைகளுக்கு வெகுவாக பலன் அளிக்கிறது. தூக்கமின்மை, சர்க்கரை நோய், இதயநோய், வலி உபாதைகள், நினைவாற்றல், இயலாமை மற்றும் பலவற்றிற்கு இது அற்புதமருந்து. களைப்போ சோர்வோ இருக்கும் போது இப்பயிற்சியினைச் செய்யலாம். ஒலிநாடாவின் உதவியுடனும் செய்யலாம். ஆன்மீக பலன்கள் : மனம் ஆழ்ந்த ஓய்வைப் பெறும். அந்தரங்க யோகப் பயிற்சிக்கு வெகுவாக பயன்படுகின்றது. செய்பவரின் உடல் நலனை அதிகரிக்க செய்கிறது. பஞ்சகோசங்களையும் சுத்திகரிக்கும் ஆசனம் இது. வயது, உடலின் நிலை போன்ற வரம்பின்றி அனைவரும் பயிற்சி மேற்கொள்ளலாம். செய்யும் நேரம் முழுமையும் சுவாசம் மெதுவானதாக, ஆழமானதாக, ஓய்வாக, சீரானதாக ஏககாலத்தில் நிகழ்கிறது. சவாசனம் மல்லாந்து படுத்திருக்கும் நிலைமட்டுமல்லாது வேறு சில நிலையிலும் செய்யலாம். (ஆசிரியரை அணுகவும்) |
Comments
Post a Comment