அகத்தியர் ஞானம் 1
அகத்தியர் ஞானம் 1
கம்பத்து எழுத்தோ கடையெழுத்தோ
காலமெல்லாம் கடந்த எழுத்தோ
உம்பர்க்குரிய உயிரெழுத்தோ
ஒருகால் இருகால் உயிரெழுத்தோ
செம்பொற் குறியைச் சேர்ந்தெழுத்தோ
சேர்ந்தோர்க்கு என்றும் அருள் புரியும்
அம்பத்தோ ரட்க்ஷரத்தை ஒருமா அய்யா
அகர முதல் அவ்வெழுத்தென்பார்
அகத்தியர் ஞானம் என்னும் பாடல் தொகுப்பில் அகத்தியர் ஒன்று, இரண்டு, மூன்று என்று ஏறுமுகமாக பாடல்களை அளித்துள்ளார். உதாரணமாக, அகத்தியர் ஞானம் 1 என்னும் இந்த நூலில் ஒரு பாடல் உள்ளது, ஞானம் 2 ல் இரண்டு பாடல்கள் உள்ளன. இப்பாடலில் அகத்தியர் சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஐம்பத்தொரு அட்சரங்களைப் பற்றிக் கூறுகிறார். நாம் கேட்கும் ஓசைக்கு அடிப்படையாக இருப்பது நாதம். இந்த நாதத்தின் முதல் வெளிப்பாடு எழுத்துக்கள்.
கம்பம் என்றால் தூண் மற்றும் அசைவு என்று பொருள். இங்கு தூண் எனப்படுவது சுழுமுனை நாடி. அதில் குண்டலினி சக்தி பாயும்போது அது தீக்கம்பமாக இருக்கிறது. இந்தத் தீக்கம்பம் குறிப்பது ஆதி வஸ்துவை. அதன் எழுத்து அகாரம். கம்பம் என்பதை அசைவு என்று எடுத்துக்கொண்டால் அது பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த முதல் அசைவை, சித்தைக் குறிக்கிறது. சத்தாக இருந்த ஆதி வஸ்து சித்தைப் பெற்று உலகமாக விரிந்தது. இதைக் குறிக்கும் எழுத்து அகாரம். அதுவே எழுத்துக்களில் முதலெழுத்து. இந்த ஆதி வஸ்து காலத்தைக் கடந்தது.
அகத்தியர் ஐம்பத்தொரு எழுத்துக்கள் என்று கூறுவதை சம்ஸ்கிருத எழுத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால் கடை எழுத்து அல்லது கடைசி எழுத்து ஹங் என்பதாகிறது. ஹ என்பது வெளிப்பாடு நிலை ஹங் என்பது சக்தி நிலை. இங்கு சம்ஸ்கிருத எழுத்துக்களைக் குறிப்பதற்குக் காரணம் அவை நமது உடலாகவும் பிரபஞ்சமாகவும் விரியும் தத்துவங்களைக் குறிக்கின்றன.
குண்டலினி சக்தியின் பாதையில் உள்ள சக்கரங்களின் இதழ்களில் இந்த எழுத்துக்களைக் குறிப்பது அந்த சக்கரங்கள் எந்த தத்துவங்களைக் குறிக்கின்றன என்பதைக் காட்டத்தான். உதாரணமாக, லம் என்பது நிலத்தைக் குறிக்கிறது. இவ்வாறு அகரத்துக்கும் ஹகாரத்துக்கும் இடையில் பிரபஞ்சம் இருக்கிறது என்றும் அஹம் என்பது ஆத்மா அல்லது “தான்” என்பதைக் குறிக்கிறது என்றும் நந்திகேச காசிகா என்ற நூல் கூறுகிறது.
ஆதிவஸ்து பிரபஞ்சமாக விரியும்போது முதலெழுத்தாக இருக்கும் அகாரம் லயமடையும்போது கடைசி எழுத்தாக இருக்கிறது. இந்த அகாரம் இ என்னும் சித்கலாவுடன் சேரும்போது உகாரம் என்றாகிறது. உம்பர் அல்லது உயராத்மாக்களின் எழுத்து உகாரம் என்கிறார் அகத்தியர்.
ஒரு கால் இரு கால் என்பது உள்மூச்சு வெளி மூச்சு என்றும் மாத்திரை என்ற கால அளவை எடுத்துக்கொண்டால் குறில் நெடில்களையும் குறிக்கும். மெய்எழுத்துக்களைக் கூறாமல் உயிரெழுத்துக்கள் என்று கூறுவதற்குக் காரணம் உயிரெழுத்துக்கள் இல்லாவிட்டால் மெய் எழுத்துக்களை உச்சரிக்க முடியாது. இவ்வாறு மெய் அல்லது உடல் எழுத்துக்களுக்கு உயிரை, இருப்பைக் கொடுப்பது உயிரெழுத்துக்களே.
செம்பொற்குறி என்பதைச் சின்முத்திரை என்று கொண்டால் அது நாதம் என்னும் தத்துவத்தையும் உலகம் எவ்வாறு நாதத்திலிருந்து தோன்றி மறைகிறது என்பதையும் குறிப்பதாகிறது. கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்திருப்பது ஒரு வட்டத்தை, உலகம் தோன்றி மறைவதைக் குறிக்கிறது. வெளிப்பட்டிருக்கும் மூன்று விரல்கள் சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற, உலகம் தோன்றுவதற்கு ஆதியாக இருக்கும் முக்குணங்களையும் உலகம் என்பது பசு, பதி, பாசம் என்பதால் ஆனது என்பதையும் இன்னும் பிற தத்துவங்களையும் காட்டுகிறது. இவ்வாறு செம்பொற்குறி ஐம்பத்தொரு அட்சரங்களைக் குறிக்கிறது. இந்த எழுத்துக்கள் தம்மைச் சேர்ந்தவர்க்கு பெரும் அருளைத் தருகின்றன, அவை இக பர சுகங்களாக இருக்கலாம், ஞானமாக இருக்கலாம் ஏனெனில் பல நன்மைகளை அளிக்கும் மந்திரங்கள் இந்த எழுத்துக்களால் ஆனவையே.
ஐம்பத்தொரு எழுத்துக்கள் என்பது நமசிவய என்றும் சிலர் கூறுகின்றனர். அ என்பதை 1 என்று கொண்டால் ந- 9 ம-11 சி- 4 வ- 15 ய- 12 என்பதன் கூட்டுத்தொகை ஐம்பத்தொன்றாகிறது.
சிறு குறிப்பு:
எழுத்துக்களும் அவை குறிப்பவையும் (நந்திகேச காசிகாவிலிருந்து)
அ- பிரம்மத்தின் உருவம்
இ- சித்கலா அல்லது காம பீஜம் படைக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பம்
உ- அ+இ- ஈஸ்வரன்
லு- பரபிரம்மம்
ல்ரு- மாயை
க்- உலகம் (லு+ல்ரு)
எ,ஓ- இறைவனுக்கும் மாயைக்கும் உள்ள தொடர்பு
ஐ, ஔ- அனைத்தும் இறைவனுள் அடக்கம் (ஐ=ஆ+ஈ, ஔ=ஆ+ஊ)
ஹ-ஆகாயம்
ய- காற்று
வ- நீர்
ர- நெருப்பு
ல- நிலம், ஆணின் சுக்கிலம் இதிலிருந்து தோன்றுகிறது
ஞ-சப்தம்
ம-ஸ்பர்சம்
ங-ரூபம்
ண- ரசம்
ன- கந்தம்
கர்மேந்திரியங்கள் (நான்காம் எழுத்துக்கள்)
ஜ-வாய்
ப- கை
க- கால்
ட- பிறப்புறுப்பு
த- கழிவை வெளியேற்றும் உறுப்பு
ஞானேந்திரியங்கள் (மூன்றாம் எழுத்துக்கள்)
ஜ,ப,க,ட,த
ஐவகை பிராணன்கள் (இரண்டாம் எழுத்துக்கள்)
க,ச,ப,ட,த
முதல் எழுத்துக்கள்
ச-மனஸ்
ட-புத்தி
த-அகங்காரம்
க-புருஷன்
ப- பிரகிருதி
ச- ரஜஸ்
ஷ- தமஸ்
ஸ-சத்வம் அ+ஹம்- அஹம்- ஆத்மா

Comments
Post a Comment