சுவாசம் ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நம் நாசித்துவாரங்களில் சுவாசம் மாறுகிறது. 12 மணிநேரம் வலது நாசி வழியாகவும், 12 மணி நேரம் இடது நாசி வழியாகவும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறி மாறி சுவாசம் நடக்கிறது. இதை ஆராய்ந்து சித்தர் பெருமக்கள் எந்தெந்த தினங்களில் சூரியநாடியில் ஓடும், எந்தெந்த நாட்களில் சந்திரநாடியில் ஓடும் என்று கணித்து வைத்துள்ளார்கள். அது எவ்வாறு எனில், சுக்லபட்சம்- பிரதமை,துதிகை, திரிதிகை, சப்தமி, அஷ்டமி, நவமி, தரியோதசி, சதுர்தசி, பௌர்ணமி இந்த நாட்களில் சூரிய உதயம் முதல் இடது நாசியில் சரம் ஓடத்துவங்கும். சுக்லபட்சம்- சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி,தசமி,ஏகாதசி,துவாதசி இந்த நாட்களில் வலது நாசியில் சரம் ஓடத் துவங்கும். கிருஷ்ணபட்சம்- பிரதமை, துதிகை, திரிதிகை, சப்தமி, அஷ்டமி, நவமி, திரியோதசி, சதுர்தச, அமாவாசை ஆகிய நாட்களில் சூரிய உதயம் முதல் வலது நாசியில் ஓடத்துவங்கும். கிருஷணபட்சம்- சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, துவாதசி நாட்களில் இடது நாசி வழியாக சரம் ஓட ஆரம்பிக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாறுவதை கவனியுங்கள். ஒரும...
Comments
Post a Comment