மூச்சு
மூச்சு
ஞானம் அடைய தியானம் ஒன்றே வழி.
தியானத்தில் மூலம் தான் எண்ணங்கள் அற்ற நிலை அடைய முடியும்
எண்ணங்கள் அற்ற நிலை அடைந்தால் தான் ஐம்புலன்கள் தாண்டிய உண்மைகள் புலப்படும்
இன்னும் ஆழ்ந்து செல்ல செல்ல இப்பிரபஞ்சத்தின் பல்வேறு அதிர்வுகளை,அலைகளை அறிய,உணர முடியும்.
பிரபஞ்சத்தில் உள்ள படைப்பின் ஞானம் அனைத்தும் அதிர்வுகளாக அலைகளாக எங்கும் பரவி உள்ளன.
அதை உள்வாங்கிகொள்ளும் ஆற்றல் ஆள்நிலை தியானத்தில் தான் கிடைக்கும்.
அந்த தகவல்கள் அனைத்தையும் உள்வாங்கிகொள்ள உங்களால் முடிந்தால் உங்களுக்கும் அனைத்தும் புலப்படும்.நீங்களும் ஞானி தான்.
தேவை தியானம் மட்டுமே,இடை விடாத தியானம் மட்டுமே.
வேற எதுவும் உங்களுக்கு உதவாது. நீங்கள் அறியும் அனைத்தும் தகவல் அறிவு(knowledge) தான். தகவல் அறிவு சுமை ஆகும்
உன் மூச்சு குறைய, உயிர் மூச்சு உயரும் .
மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை
குறைக்கப் பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.
நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும்
காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி
சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக
இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக்
காற்று வந்தால் சுழிமுனை என்பர். பொதுவாக
மழைக் காலங்களில் இயற்கையாகவே
சூரியகலையில் ஓடும். ஆதிக வெயில்
அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.
ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சம நிலையில் இருக்க வேண்டும்.
இதில் எந்தக் குறைபாடு நேர்ந்தாலும் நமது
உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு
சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று
நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம்
சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள்
தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில்
மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம்
சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால்
ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க
ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால்
ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள்
உயிருடன் வாழ்கின்றன.
நாம் நடக்கும் போது16 அங்குலமும்,
அமர்ந்திருக்கும் போது 12அங்குலமும்,
ஓடும் போது 25 அங்குலமும்,
உறங்கும் போது 36 அங்குலமும்,
உடல்உறவுகொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம்நடைபெறுகிறது.
சுவாசம்
11 அங்குலமாக குறைந்தால் உலகஇச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம்உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6 அங்குலமாககுறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.
Comments
Post a Comment