சந்திர யோகம்.
சந்திர யோகம்.
★காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் கால் வலத்திட்டு பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே. திருமந்திரம்- 866.
சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம்.
மூலத்தில் உள்ள மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள சூரியனோடு இணைத்து, அந்த சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர வைத்து, அந்த ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும். சூரியனும், அக்கினியும் உஷணமானவை. சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம் குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம் உண்டால் காலத்தை வெல்லலாம், சிவகதி அடையலாம். சந்திர யோகத்தை பிழையில்லாமல் செய்தால் ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல் விளங்கும்.
★சந்திர யோகி காமத்தை வெல்வார். அவரது விந்து விரையமாகாமல் மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால் எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில் ஒளியேற்றும்.
★ ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும் இருநாடி வழியாக பிராணன் இயங்குவது போல, சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவே சந்திரயோகம்.சந்திர யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று திருமூலர் சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர யோகத்தில் திளைத்தவர்கள்தான். விஸ்வாமித்திரர் சூரிய கலையையும், வசிஷ்டர் சந்திரகலையையும் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.
★சந்திர யோகத்தில் அமரும் விதம். வலது காலை அடியில் வைத்து, இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு நேரே இருக்கும்படியாக அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும் போது சுவாசம் இடது பக்கமாக ஓட ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உடல் குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம் சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய கலையில் அமர்வது எப்படி என்றால், வலது காலை மேலே வைத்து, இடது காலை கீழே வைத்து பருவ மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது. வலது மூக்கில் சுவாசம் வரும் வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம் ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக் கொள்ளலாம்.
★ பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில் இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும் எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திரகலை பயிற்சியை யார் வேண்டுமானாலும் தினமும்இருவேளை அதாவது சுமார் ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ, ஞானியாகவோ விரும்புபவர்கள் 24 மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம் எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக நீண்ட பதிவு தேவைப்படும், எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
★ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள் நாழிகை ஆக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழவல்லார் இச் சசிவன்னராமே. திருமந்திரம் -874.
சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள் ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திரு மூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர யோகம் பற்றி விளக்குகிறது. படித்து உணர்ந்து பயனடையுங்கள்.
★குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே விந்து விரையமாகாமல் சிவநிலை அடைய பரியங்க யோகம் உதவும். இல்வாழ்வையும், யோகவாழ்வையும் இணைக்கும் அற்புதமான யோகம் பரியங்க யோகம். யோகம் என்றால் ஐக்கியம் என்பர்.ஆத்மா சிவனோடு ஐக்கியமாவது போல, ஆணும் பெண்ணும் விந்து விரையமாகாமல் ஐக்கியமாவதே பரியங்க யோகம். இதைக்குறித்து திருமந்திரம் – 825- 844 வரையுள்ள மந்திரங்கள் விளக்குகின்றன.
★அமுரி தாரணை என்றால்சிறுநீர் வைத்தியம் என்றும், சுக்கில சுரோணிதத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு ஏற்றும் பயிற்சி என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. பெண்களுக்கும் யோகமார்க்கம் சித்திக்கும் என்பதை தெளிவு படுத்தவே சுரோணிதமும் சொல்லப் பட்டுள்ளது. திருமந்திரம் -845-850 வரை இதைக்குறித்த விளக்கங்களைக் காணலாம்.
முத்திரைகளின் அரசன் என்று கேசரி முத்திரையைச் சொல்வார்கள். அதைப்போல ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள். நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும் உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.
★அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி. குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற கருத்தும் உண்டு. குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.
★குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர். பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும். நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும்.
★ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும். இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.
★ மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும். மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினிகுண்டலினி என்பர். அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள். அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.
★யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும். அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான்.
★பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ளது. அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார். முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம் போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல.
★அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும்.
லம்பிகா யோகத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது கண்” என்ற ஆங்ஞா சக்கரம் [பினியல் சுரப்பி(pineal gland)]பற்றி கீழே படித்துப்பாருங்கள். ”
#மூன்றாவது_கண் ” நம் ஹிந்து மதத்தில் சிவ பெருமானுக்கு புருவ மத்தியில் மூன்றாவது கண் உள்ளது.
உண்மையில் நம் அனைவருக்குமே மூன்றாவது கண் உள்ளது. அது புருவ மத்தியில் மூளையில் கண் போன்ற அமைப்பு உள்ளது.
அதுவே பினியல்_சுரப்பி (pineal gland). இச்சுரப்பியின் செயல்பாடுகள் மருத்துவ ஆய்வுக்கே புலனாகாத புதிர்களாக உள்ளது.ஆய்வுக்காக எலியின் பினியல் சுரப்பியை நீக்கி பார்த்த போது அவை வழி தெரியாமல் குழம்பியது கண்டு பிடிக்கப்பட்டது .
நம் யோகக்கலையில் குறிப்பிடப்பட்ட ஏழு சக்தி மையங்களில் மிக முக்கியமானது புருவ மத்தியில் உள்ள ஆங்ஞா_சக்கரம் .
முக்காலமும் உணரும் ஆற்றலான சூட்சும ஞான திருஷ்டி என்னும் # CLAIVOYANCE -ஆங்ஞா சக்கரம் தூண்டப்படுவதால் கிடைப்பதாக இந்து தத்துவங்கள் கூறுகிறது. அதை தூண்டுவதற்க்காகவே புருவ மத்தியில் பொட்டு வைக்க அறிவுறுத்தப் படுகிறது. மேலும் ஆங்ஞா சக்கரத்தைப் பற்றி யோக நூல்களில் கூறியுள்ளது கீழே தரப்பட்டுள்ளது. இது இரு புருவங்களுக்கு இடையே நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது.
இதை நெற்றிக்கண் சக்கரா என்று அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரு இதழ் தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஓம் என்ற சப்தத்தால் தூண்டப் படுகிறது. அகப்பார்வை, ஆழ்மன சக்திகள் ,தெய்வீக ஞானம் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து உள்ளது.
அறிவியல் ஆய்வுகள் பினியல் சுரப்பியை பற்றி கூறுவது கீழே தரப்பட்டுள்ளது இச் சுரப்பி மெலட்டோனை சுரக்கிறது. மேலும் இச்சுரப்பு சோடியம்,பொட்டாச ியம்,ஆகிய உப்புகளின் அளவை சீராக வைக்கிறது.
இதனால் நம் உடலில் விழிப்பு, துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. அறிவு, நற்குணம், தன்னம்பிக்கை. மனஉறுதி ஆகியவற்றை தீர்மானிக்கிறது. இச் சுரப்பி நன்கு வேலை செய்யும்போது மனித மூளையின் ஆற்றலும் செயல்திறனும் பல மடங்கு அதிகரித்து ஜீனியசாக ( genius ) மாறுகிறான்.
★ இறுதியாக #பகவத்_கீதை ஸ்லோகம் கூறி இந்த பதிவை நிறைவு செய்வோம். “எவனொருவன் இறக்கும் நேரத்தில் தன் யோக சக்தியால் உயிர் மூச்சை புருவ மத்தியில் நிறுத்தி உடலை விடுகிறானோ அவன் இறைவனின் புனிதமான ஆன்மீக உலகை அடைகிறான்” -அத்தியாயம்8 ,ஸ்லோகம் 10.

Comments
Post a Comment