அகத்தியர் ஞானம் - 5.4


அகத்தியர் ஞானம் - 5.4


தானென்ற இம்முறையைஅறியலாச்சு
தாயென்பார் அசடர்களைத் தள்ளு தள்ளு
கோனென்றால் வருமோதான் குவித்துப் பாரு
கூறஒண்ணா இக்கருவைப் பேசலாச்சு
வானென்ற பெரியோரைக் கண்டு தேரு
வணங்கியே அனுதினமும் மகிழ்ச்சியாக
பானென்ற முப்பொருளும் ஈசன் தானும்
பார்வதிக்கே தானுரைத்தார் பரிசை வென்றே.


இதுவரை தான் கற்றுக்கொடுத்த வாசி யோகம் “தான்” என்னும் யோகம் அதாவது ஆத்மாவை அறியும் யோகம் என்றும் அதை தாய் என்று சிலர் கூறுவார் என்றும் அகத்தியர் புலத்தியரிடம் சொல்கிறார். இங்கு தாய் என்பது அன்னை குண்டலினி. இவ்வாறு இந்த யோகம் குண்டலினி யோகம் என்பது தெரிகிறது. இந்த யோகத்தைப் பயிலாமல், இதைப் பற்றிய உண்மையை அறியாமல் இருக்கும் அசடர்களைத் தள்ள வேண்டும் என்று புலத்தியருக்கு அகத்தியர் கூறுகிறார். இந்த யோகத்தைப் பற்றி ஒருவர் பேசித் திரிந்தால் பயனில்லை. ராஜா என்றால் அரசன் வரமாட்டான், நாம்தான் அவனைத் தேடிச் செல்ல வேண்டும். குண்டலினி யோகம் என்று பேசினால் மட்டும் யோக சித்தி ஏற்படாது அதை ஒருவர் பயிற்சி செய்யவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். இதனால் ஒருவர் பேசிப் பொழுதை வீணடிக்காமல் இந்த யோகத்தில் தேர்ந்தோரை அணுகி அவரை மகிழ்ச்சியுடன் வணங்கி அவரிடமிருந்து இதைக் கற்றுப் பயிற்சி செய்ய வேண்டும். இதை அனுதினமும் செய்ய வேண்டும் அதாவது இந்த யோகம் இதில் சித்தி பெற்றவரின் கண்பார்வையில் பயிற்சி செய்யப்பட வேண்டும் என்பதே அகத்தியரின் அறிவுரை.
இந்த வழிமுறையை, முப்பால்களான காமப்பால், கானல் பால், வாமப்பால் என்ற மூன்றை வெல்வதான பரிசையுடைய ஈசன் இதை பார்வதிக்குக் கற்றுக்கொடுத்தார் என்கிறார் அகத்தியர்.

Comments

Popular posts from this blog

தச வாயுக்களும் அதன் பணிகளும்

சுவாசம்

கற்பம் (அகம்)