Posts

அகத்தியர் ஞானம் - 5.5

அகத்தியர் ஞானம் - 5.5 என்றனவே பொருளதுவாய் ரவியிற் புக்கும் எடுத்துரைக்கப் போகாது என்ன சொல்வேன் நன்றெனவே வகையைந்து பாட்டுக்கு நான்முகத்தோன் சொல்லிவிட்டோம் நயந்து பாரு நன்றான பொருளிதுதான் உற்றுப் பாரு ஓகோகோ என்ன சொல்வேன் உகமாய் அன்றே இன்றேதான் புதுமையிது இந்த எழுத்தைக் காணார் ஈப்பட்ட தேனதுபோல் இகழ்ந்த வாறே பொருள்கள் அனைத்தும் ரவியினுள் புகும் என்று அகத்தியர் இப்பாடலைத் தொடங்குகிறார். இங்கு பொருள்கள் என்பது எல்லா தத்துவங்களும் ஆகும். இவை ஐந்தைந்தாக குறிக்கப்படுகின்றன.  ஐம்பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், இந்திரியங்கள், வாயுக்கள் என்று ஐந்தாக இருக்கும் இவை ஒருமை நிலையை அடைவதை அகத்தியர் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று என்கிறார், நான்முகனைச் சொன்னோம் என்று அகத்தியர் குறிப்பிடுவது நான்கு உணர்வு நிலைகளைக் குறிக்கும். பொதுவாக நான்முகன் என்று சித்தர்கள் குறிப்பிடுவது சதாசிவனை. அவர் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் மற்றும் தத் புருஷம் என்ற ஐந்து முகங்களை உடையவர். இவற்றில் சத்யோஜாதம் மேல் நோக்கிய முகம். அதை நாம் பார்க்க முடியாது. நான்கு முகங்கள் தான் சித்தர்களுக்குத...

அகத்தியர் ஞானம் - 5.4

அகத்தியர் ஞானம் - 5.4 தானென்ற இம்முறையைஅறியலாச்சு தாயென்பார் அசடர்களைத் தள்ளு தள்ளு கோனென்றால் வருமோதான் குவித்துப் பாரு கூறஒண்ணா இக்கருவைப் பேசலாச்சு வானென்ற பெரியோரைக் கண்டு தேரு வணங்கியே அனுதினமும் மகிழ்ச்சியாக பானென்ற முப்பொருளும் ஈசன் தானும் பார்வதிக்கே தானுரைத்தார் பரிசை வென்றே. இதுவரை தான் கற்றுக்கொடுத்த வாசி யோகம் “தான்” என்னும் யோகம் அதாவது ஆத்மாவை அறியும் யோகம் என்றும் அதை தாய் என்று சிலர் கூறுவார் என்றும் அகத்தியர் புலத்தியரிடம் சொல்கிறார். இங்கு தாய் என்பது அன்னை குண்டலினி. இவ்வாறு இந்த யோகம் குண்டலினி யோகம் என்பது தெரிகிறது. இந்த யோகத்தைப் பயிலாமல், இதைப் பற்றிய உண்மையை அறியாமல் இருக்கும் அசடர்களைத் தள்ள வேண்டும் என்று புலத்தியருக்கு அகத்தியர் கூறுகிறார். இந்த யோகத்தைப் பற்றி ஒருவர் பேசித் திரிந்தால் பயனில்லை. ராஜா என்றால் அரசன் வரமாட்டான், நாம்தான் அவனைத் தேடிச் செல்ல வேண்டும். குண்டலினி யோகம் என்று பேசினால் மட்டும் யோக சித்தி ஏற்படாது அதை ஒருவர் பயிற்சி செய்யவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். இதனால் ஒருவர் பேசிப் பொழுதை வீணடிக்காமல் இந்த யோகத்தில் த...

அகத்தியர் ஞானம் - 5.3

அகத்தியர் ஞானம் - 5.3 ஆச்சென்ற பிண்டமது அண்டம் எல்லாம் ஆச்சரியம் உன் மௌனம் என்ன சொல்வேன் வாச்சென்ற அண்டத்தை நோக்கிப் பாரு வாருதிபோல் ரவிமதியுந் தோணும் தோணும் நீச்சென்ற குரு தீக்ஷைக் குள்ளே புக்கி நிலைச்சுதடா காயமதில் அருவமில்லை ஓச்சென்ற வாயுவெல்லாமதி ரவியிற் புக்கி அடங்கிற்று பார்த்துக்கோ உள்ளம் தானே. இப்பாடலில் அகத்தியர் ஆக்ஞா சக்கரத்தில் நிலவும் நிலையைக் குறித்துப் பேசுகிறார். தசதீட்சை எனப்படும் அகார உகார தீட்சைகளை அடுத்து ஒரு சாதகன் குரு தீட்சையைப் பெறுகிறான். குரு என்றால் இருட்டை விலக்குவது. இங்கு அளவுக்குட்பட்டதாக எண்ணும் எண்ணத்தைத் தரும் திரைகளை நீக்குவதே குரு தீட்சை எனப்படுகிறது. குரு தீட்சியைப் பெறும் ஒரு யோகி தான் எங்கும் நிறைந்திருப்பதைக் காண்கிறார். பிண்டமாக இருக்கும் தானே அண்டமாக இருப்பதையும் உணருகிறார். இதுவே மோன நிலை. சக்தி நிலை. இதை ஆக்ஞாவில் அனுபவிக்கலாம்.  இதனை அடுத்து அகத்தியர் ரவி மதி என்ற இரண்டைப் பற்றிப் பேசுகிறார். பொதுவாக ரவி மதி என்பது சூரியனையும் சந்திரனையும் குறிக்கும். இது பிங்கலை,இடை நாடிகளையும், வலது மற்றும் இடது கண்களையும் குறிக்...

அகத்தியர் ஞானம் - 5.2

அகத்தியர் ஞானம் - 5.2 வாறு கேள் எட்டுரெண்டுங் கூடலாச்சு வந்துதடா உந்தனுக்கு மகிழ்ந்து பாரு கூறு கேள் உப்பினிடத்தில் அப்பேயாச்சு கொடிதான சுருக்கமது காணப்போகா நீறுகேள் தானத்தை மேவிப் பாரு நிலைத்துதடா தீக்ஷையது பத்துமாகும் மாறு கேள்ஓராண்டு செயித்தாயானால் ஆச்சரியம் உலகமெல்லாம் அவனுள் ஆச்சே தச தீட்சை என்பது உப்பின் இடத்தில் அப்பு இருப்பது என்று இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர். இங்கு உப்பு என்பது உகாரம், அப்பு என்பது அகாரம். உகாரம் என்பது ஜீவனைக் குறிக்கும். அகாரம் என்பது ஈஸ்வரனைக் குறிக்கும். இவ்வாறு தச தீட்சை என்பது ஜீவன் சிவனாவதைக் குறிக்கிறது. உப்பு நீரில் கலந்தால் இருப்பது நீர் மட்டும்தான், உப்பு தெரிவதில்லை. இவ்வாறு உப்பின் இடத்தில் அப்பு இருக்கிறது. ஜீவன் சிவனானால் இருப்பது சிவன் மட்டுமே ஜீவன் இனி அங்கு இருப்பதில்லை. இதுவே தசதீட்சை. இது நடைபெறும் இடத்தைப் பார்க்குமாறு புலத்தியருக்குக் கூறுகிறார் அகத்தியர். இவ்வாறு ஜீவன் சிவன் ஆவதை ஒருவர் யோகத்தின் சமாதி நிலையில் அனுபவிக்கிறார். இவ்வாறு இந்த சமாதி யோகத்தை ஒருவர் ஒரு ஆண்டு செய்தால் உலகங்கள் அனைத்தும் அவருக்குள் வ...

அகத்தியர் ஞானம் - 5.1

அகத்தியர் ஞானம் - 5.1 ஆதியந்த மெய்நிறைந்த தீக்ஷை மார்க்கம் அருள் பெற்ற புலத்தியனே சொல்லக் கேளு சேதியந்தத்துள்ளிருக்குஞ் சுடரே போற்றி சொல்லுகிறேன் அகாரமுடன் உகார (ம்) நோக்கி வேதியந்தக் கமலத்தின் பொருளே யாகும் வேதாந்த முடிந்ததுதான் எட்டும் இரண்டும் சோதிஎன்ற தீக்ஷையது அறிந்து பாரு சத்தியந்தான் உந்தனுக்குத் தவறாவாறே அகத்தியரின் ஞான தீட்சை சுருக்கம் 5 என்னும் இந்த நூலில் அகத்தியர் தீக்ஷை பற்றி புலத்தியருக்குக் கூறுகிறார். தீட்சை என்றால் ஒரு இலக்கை நோக்கித் தொடங்கும் பாதையின் முதல் படி, ஆரம்பம் என்று பொருள். இங்கு இலக்கு பரவுணர்வு. தமிழ் சித்தர் மார்க்கத்தில் அதற்கான தீட்சை தச தீட்சை எனப்படுகிறது. அருணாசல குரு என்பவர் தனது நிஜானந்த போதம் என்ற நூலில் தச தீட்சை என்பது பத்து நிலைகளைக் கொண்டது என்று கூறுகிறார்.  முதல் தீட்சையில் உடலில் உள்ள அழுக்கு நீர் வெளியேறுகிறது.  இரண்டாவது தீட்சையில் வாதம் பித்தம் கபம் என்ற மூன்றும் உடலைவிட்டு வெளியேறுகின்றன.  மூன்றாவதில் பழைய அழுக்கு ரத்தம் உடலைவிட்டு வெளியேறுகிறது.  நான்கில் சடலம் கழன்று தோல் பாம்பு சட்டையை உரிப்பது...

அகத்தியர் ஞானம் - 4.4

அகத்தியர் ஞானம் - 4.4 கண்டறி ஞானந் தன்னைக் கருவுடன் கண்டாயானால் அண்டத்தில் குளிகை தேறு மதில் வாதங் காணலாகும் எண்டிசை யுலகந் தன்னை எளிதினில் காணலாகும் சண்டருக்குரைக்க வேண்டாம் சாயுச்சிய ஞானமுற்றே (4) அகத்தியர் தனது மனதை நோக்கி, “மனமே! இவ்வாறே பல கோடி மக்களும் தேவர்களும் அண்டங்களும் உலகங்களும் திசைகளும் தோன்றின” என்று கூறி இந்த அறிவை ஞானத்தின் கரு என்கிறார், ரசவாதத்தைத் தோற்றுவிக்கும் குளிகை என்கிறார். T.V. சாம்பசிவம் பிள்ளை என்பவர் தனது அருஞ்சொல் விளக்கத்தில் குளிகை என்பதை தேன் போன்ற வஸ்துக்களைக் கொண்டு மருந்துப் பொருள்களை அருவருக்காது எளிதாக விழுங்குவதற்கு ஏற்றதாகச் செய்யும் ஒரு தயாரிப்பு என்கிறார். அதாவது உண்மையான மருந்தை பிற பொருள்களில் பொதித்துத் தருவது என்கிறார். இங்கு உண்மை என்ற ஞானம் உலகினுள் பொதித்துவைக்கப்பட்டுள்ளது. அந்த ஞானத்தைப் பெற்றால் அது அவ்வாறு பெற்றவருள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கீழ்ப்பட்ட உலோகங்களை எவ்வாறு ரசவாதம் உயர்ந்ததாக மாற்றுகிறதோ அதேபோல அவரை உயர்ந்த சாயுச்சிய பதவிக்கு உயர்த்துகிறது. தமிழ் சித்தர்கள் பொதுவாக ரசவாத சொற்களைக் கொண்டு உள்ளே ஏ...

அகத்தியர் ஞானம் - 4-3

  அகத்தியர் ஞானம் - 4-3 கடந்திட்ட மனமே கேளு காசினி மன்னர் கோடி இடந்திட்ட இந்திரர் கோடி எண்ணவு முடியா தப்பா படைத்திட்ட அண்டங் கோடி பரகெதி ஞானங் கோடி கடந்திட்ட மனத்தினாலே கண்டறி நீதானப்பா (3) படைப்பைப் பற்றிய தனது விளக்கத்தை இப்பாடலிலும் தொடர்கிறார் அகத்தியர். மேற்கூறிய விதத்தில் எண்ணற்ற மன்னர்களும் (மானிடர்களும்), இந்திரர்களும் (தேவர்களும்), அண்டங்களும் (ஜட வஸ்துக்களும்) பரகதி, ஞானங்களும் படைக்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். முற்பாடலில் அவர் இறைவர்கள் அனைவரும் ஜீவன் தோன்றும் உடலில் படைக்கப்பட்டனர் என்று கூறினார். அதை இப்பாடலிலும் பொருத்தினோமானால் இந்த தேவர்கள், மனிதர்கள், அண்டங்கள் என்ற அனைத்தும் நமது உடலுள் இருக்கின்றன என்று அவர் கூறுவதாகத் தோன்றுகிறது. இவ்வாறு அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்ற கருத்து நிறுவப்படுகிறது. இவையனைத்தையும் தனது சீடர், பொதுவாக அகத்தியரது பாடல்கள் புலத்தியரைக் குறித்து இருப்பதால் அவர், தனது வேறுபட்ட நிலையைக் காண்பதைக் கடந்த மனத்தினால் பார்க்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். செம்மைப்படுத்தப்பட்ட மனம் உண்மை நிலையைக் காட்டும் என்பது ...